70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக 2 முறை ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் நடைபெறலாம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று பிற்பகல் அறிவிக்கிறார்.
தேர்தல் தேததி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது.
டில்லி தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.