டில்லி மாநகராட்சி தேர்தல் 5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும் பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. காங்கிரசும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதல் ஆம் ஆத்மி முன்னணியில் இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 106 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 25 இடங்களில் முன்னணியில் இருந்தது.
பாரதிய ஜனதா 84 இடங்களில் வெற்றி பெற்றது. 20 இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று, 5 இடங்களில் முன்னணியில் இருந்தது. மாநகராட்சியை கைப்பற்ற மொததம் 126 இடங்கள் தேவை. ஆம் ஆத்மி அதை விட அதிகம் வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் டில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே டில்லி மாநகராட்சி பா.ஜ. வசம் இருந்தது. அதை ஆம் ஆத்மி கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.