டில்லியில் மே 25-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார்போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். இதையடுத்து டில்லியில் தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டில்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக பிரசாரத்தின்போது போது உடனிருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.