தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டில்லி செல்கிறார். டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். தமிழக கவனர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து இன்று மனு அளித்த நிலையில் கவர்னரை டில்லி அவசரமாக அழைத்து உள்ளது. அநேகமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தெரிகிறது.
ரவி 17ம் தேதி வாக்கில் டில்லி செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை டில்லி அவசரமாக அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.