புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டில்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக 70 தொகுதிகளுக்கும் நடந்தது.
தற்போது டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து 2 முறை ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இந்த முறை காங்கிரஸ், ஆத்ஆத்மி, பாஜக என மும்முனைப்போட்டி நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு படி ஆம் ஆத்மி, பாஜக இடையே தான் போட்டி நிலவி உள்ளது.
பெரும்பாலான கருத்து கணிப்பு படி பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு டில்லியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் முன்னணி நிலவரங்கள் வெளியாகும்.
மதியம் 1 மணி அளவில் டில்லியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது தெரிந்து விடும். பெரும்பாலும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
.