டில்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 8.30 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. டெல்லியில் கடந்த 2013 முதல் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. தற்போது ஆதிசீ முதல்வராக உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், சிசோடியா, தற்போதைய முதல்வர் அடிசி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆம்ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ இடையே மும்முனை போட்டி நிலவியது. வக்கு எண்ணிக்கி தற்போதைய நிலவரப்படி, பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் டெல்லி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்துள்ளது. முதலில் 50 இடங்கள் வரை முன்னிலை வகித்த பாஜக தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.