டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார் . கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய அவரது மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே சிறையில் அடைக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
▪️ குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது. சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது . அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது . இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, ஒன்றிய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல. அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. கைதை ரத்து செய்ய முடியாது நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா தெரிவித்துள்ளார்.