Skip to content
Home » டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

டில்லி சட்டமன்றத்துக்கான  ஆயுள் காலம் பிப்ரவரி 15க்குள் முடிகிறது. எனவே  டில்லி  சட்டமன்ற தேர்தல் தேதியை  தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.  அத்துடன் ஈரோடு கிழக்கு  தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

அதன்படி  70 தொகுதிகளைக்கொண்ட  டில்லி சட்டமன்றத்துக்கு  பிபரவரி 5ம் தேதி  வாக்குப்பதிவு நடக்கிறது. பிப். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல்  வரும் 10ம் தேதி  தொடங்குகிறது. 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.  18ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும்.இறுதி வேட்பாளர் பட்டியல் 20ம் தேதி அறிவிக்கப்படும்.

இதுபோல காலியாக உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியும்  அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல்  பிப்ரவரி5ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.  17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மேலும் ராஜீவ் குமார் கூறும்போது, இந்தியாவில் தற்போது 99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் 100கோடியை எட்டிவிடுவோம்.  டில்லியில் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.   இவர்களில் ஆண்கள் 83.49 லட்சம் பேர்.   பெண்கள் 71.74 லட்சம் பேர் பெண்கள். 1261 பேர் மூன்றாம் பாலினத்தவர்.  டில்லியில் வரும் தேர்தலுக்காக 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.  முதல்முறையாக இங்கு  2.08 லட்சம் போர் வாக்களிக்க இருக்கிறார்கள்.