நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வரும் 24ம் தேதி காலை 11 மணிக்கு டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டி உள்ளது. இந்த தகவலை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
