டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை உடைமைகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அந்த மூன்று பயணிகளிடமிருந்தும் வெளிநாட்டு நாணயம் 7,20,000 டாலர் மற்றும் 4,66,200 யூரோக்கள் மீட்கப்பட்டன. இது இந்திய மதிப்பில் ரூ 10,06,78,410 க்கு சமமானதாகும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..
- by Authour
