தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில் ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை நோக்கி, அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சிறுவன் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், 40 வயதான ஆகாஷ், அவரது மருமகன் 16 வயதுடைய ரிஷப் ஷர்மா ஆகியோர் இறந்துவிட்டனர். கொலை செய்யப்பட்ட ஆகாஷின் பத்து வயதுடைய மகன் கிரிஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.