செந்துறையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி வளாகத்தின் வெளியே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்பட்டு வந்தன. மேற்கண்ட இரு ஏ.டி.எம் இயந்திரங்களும் கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளா்கள், பணம் எடுப்பதற்கும், பணம் டெபாசிட் செய்யவும் சிரமப்படுகின்றனா்.
குறிப்பாக, ஓய்வூதியம் பெறும் முதியோா், நூறு நாள் பணியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால், இங்கிருந்து 1. கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு ஏடிஎம் மையத்துக்கு செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு சென்று பணம் எடுத்து வரும் போது, பொதுமக்கள் வழிப்பறி பயத்துடனேயே செல்கின்றனா். எனவே, பழுதடைந்த இந்த ஏடிஎம் இயந்திரங்களை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏடிஎம் சேவைக்கும் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளும் ஸ்டேட் வங்கி சேவையை ஒழுங்காக செய்யாமல் மக்களை வஞ்சிக்கும் போக்கை சரிசெய்யாவிட்டால் வங்கி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பென்சனர்கள், முதியோர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.