ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான், மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வளர்க்கப்படுகிறது. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள்.
இன்று காலை இங்குள்ள மான்களுக்கு பூங்கா ஊழியர் தமிழ்ச்செல்வன் இரை போட்டார். அப்போது ஒரு மான் திடீரென அவரை தாக்கியது. இதில் அவரது வயிற்றில் கொம்பு குத்தி் ரத்த காயமடைந்தார். மான்களிடம் இருந்து அவரை இன்னொரு ஊழியர் முருகேசன் காப்பாற்றினார். அப்போது அவைரயும் மான் குத்தி்யது.
படுகாயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் தமிழ்ச்செல்வன் இறந்தார். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.