திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தீபாவளியையொட்டி நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து கார்த்திக்கின் மனைவி பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
….
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (60) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிக மது போதையில் திருச்சி செங்குளம் காலனிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிக மது போதையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கந்தசாமியின் உறவினர் சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்