தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவில் சிறுவர்கள் தீபாவளி பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பட்டாசு விண்ணில் பாய்ந்து அதே தெருவை சேர்ந்த ஹமீது( 60) வீட்டு கூரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் கூரை தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் பெரும்பகுதி கூரை எரிந்து போனது.