திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து வீட்டில் தீப்பற்றியது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.மேலும் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்த நிலையில் தீயணைப்பு வாகனம் வர முடியாமல் உய்ய கொண்டான் வாய்க்கால் கரை பாலம் சிறியதாக உள்ளதாலும் மேலும் ஆக்கிரமிப்பு உள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்து சேர முடியவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களே போராடி தீயை அணைத்தனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த பகுதியில் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட வந்து செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பு உள்ளது என்றும் மேலும் பெல் கணேசபுரம் வழியாக வருவதற்கு மேலே தடுப்பு குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் வர முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் கூறிவந்த நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பெல் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வரும் பாதையில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பை அகற்றி இதுபோன்ற அவசர காலத்தில் வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.