தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தபோது சென்னை, திருச்சி உள்பட 11 இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் 82 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த தகவலை தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 7 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் வீடு திரும்பி விட்டனர். 3பேர் இன்னும் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.