கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற நிலையில், நேற்று மாலை ஆறு மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 20 பவுன்நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….
- by Authour
