மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவில் அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி…
கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் உயர்ந்த முருகர் சிலை அமைப்பது தொடர்பாகவும்,கோயிலை ஒட்டி பட்டா இல்லாத இடங்களில் உள ஆக்கிரமிப்புகள் குறித்தும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…
தமிழ் கடவுள் முருகன் கோயில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.90 முருகன் கோயில்களில் குட முழுக்கு இடம் பெற்று இருக்கிறது.திமுக ஆட்சிக்கு பிறகு 60-70 வயது உள்ளவர்களுக்கு அரசு கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து வருகிறோம்.
7 முருகர் கோயில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் செய்யப்பட்ட வருகின்றன.பழனி ,திருச்செந்தூர், திருத்தணி , மருதமலை உள்ளிட்ட கோயில்களில் பெருந்த்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோயிலில் ஏற்படுத்தப்படவுள்ளன.முருகன் திருக் கோயில்களில் பக்தர்கள் அதிகரித்த வருவதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.லிப்ட் வசதி மே மாதத்தில் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டு வரும்.
மருதமலை முருகன் கோயிலில் 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யபட்டு வருகின்றன.ஆசியாவில் அதிக உயரம் கொண்ட சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்க உள்ளனர்.அங்கு 21 கொடி செலவில் ஏற்கனவே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்.
தைப் பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.அன்னதான பிரபு ஆக முதல்வர் திகழ்கிறார்.அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு தரப்படும்.கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அன்னை தமிழில் தான் குட முழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.