தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த உத்திராபதி வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
