காய்கறி கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது.
அரியலுார் மாவட்டம், செந்துரை, கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (33). திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். மார்ச்.25ம் தேதி சக ஊழியரான உமருடன் கடையில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது வேலைக்கு இடையூராக லோடு வண்டி கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கேட்டபோது லோடு வண்டி டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 3 பேர் ஆத்திரத்தில் செல்லமுத்துவை கம்பியால் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். கயாமடைந்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இ.பி. ரோடு, அண்ணாநகரைச் சேர்ந்த ஆறுமுகம் (48) மற்றும் அபினேஷ் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர், அவர்களுடன் இருந்த முத்தமிழ் என்பவரை தேடி வருகின்றனர்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை….
திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39) இவர் பல்வேறு நிறுவனங்களின் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். இதற்காக அவரது வீட்டின் அருகாமையில் குடோன் அமைக்கப்பட்டது. பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண் பிரசாத்
தனது குடோனில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி கலைவாணி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36).
இவரது மனைவி அன்ன காமாட்சி( 36) இந்த தம்பதியர் சமீபத்தில் கடன் தொகை பெற்று ஒரு வீடு வாங்கினர்.
பின்னர் அதற்கான தவணைத் தொகை செலுத்துவதில் கணவன் மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கடன் சுமையால் கவலை அடைந்த பிரபாகரன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மனைவி அவரை மீட்டு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் பிரபாகரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி அன்னகாமாட்சி முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.