தஞ்சை அருகே பிள்ளையார்நத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் லட்சுமி (16). தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி வீட்டில் விறகு அடுப்பில் உணவு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது விறகு அடுப்பு அணைந்து விட்டதால் மீண்டும் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க மண்எண்ணெய் எடுத்து ஊற்றி உள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த நைட்டியில் மண்எண்ணெய் பட்டுள்ளது.
பின்னர் லட்சுமி அடுப்பை பற்ற வைத்த போது தீ அவரது உடையிலும் பிடித்து எரிந்தது. இதனால் லட்சுமி அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து லட்சுமியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சபிதா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.