கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவரது தாய்மாமன் சுப்பிரமணி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு ராஜேஸ்வரியை 2வது மனைவியாக திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் 2 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சுப்பிரமணி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், குழந்தைகளை வைத்துக் கொண்டு ராஜேஸ்வரி ஜீவனம் செய்ய சிரமப்பட்டு வருகிறார். கணவரின் இறப்பிற்கு பிறகு வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் பெற முடியாத நிலை இருப்பதாகவும், தற்போது பஞ்சப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
குழந்தைகள் சத்தம் போடுவதால் வீட்டின் உரிமையாளர்களுக்கும், தங்களுக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும், அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால் அதில் தற்காலிக குடியிருப்பு அமைத்தாவது வசிப்போம் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.