Skip to content
Home » திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் தேவர் சிலை பின்புறம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
தகவல் அறிந்து கோஅபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு..

திருச்சி அரசு மருத்துவமனை எம்எஸ் வார்டில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த முதியவர் பெயர் சுந்தர வடிவேல் என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் முகவரி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர வடிவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!