கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த இடத்திலேயே அடிக்கடி இரவு வேலைகளில் லாரியில் வரும் மர்ம நபர்கள் இதுபோல உயிரிழந்த நாய்களின் உடலை வீசி விட்டு செல்வதாக சிலர் தெரிவித்தனர். குறிப்பாக இந்த நாய்கள் மயக்கமடைய செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நாய் தொல்லை அதிகம் இருக்கும் இடங்களில் அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை எழுப்புவது வழக்கம். அதுபோல பிடிக்கப்படும் நாய்களை கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் எனும் சிலர் தெரிவித்தனர்.