தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் 2 குழந்தைகளின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஆற்றில் மிதந்த இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தைகள் இருவரும் யார்? அவர்களின் பெற்றோருக்கு என்ன ஆனது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.