ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கழகத்தின் குடும்ப விழாவாக இந்த திருமண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது… மோடி எங்கள் டாடி என்று சொல்லக்கூடியவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கு அமைச்சர்களாக உட்கார்ந்து இருக்கின்றார்கள் .
இங்கு பெண்கள் அதிகமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.. ஆண்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் ஆனால் முதலில் அவ்வாறு கிடையாது. பெண்கள் பொது இடங்களில் உட்கார முடியாது. நின்று கொண்டு தான் இருக்க வேண்டும்பள்ளிக்கூடம், போக முடியாது. மேலாடை போட்டுக்கொள்ள கூடாது. ஆனால் அந்த உரிமையை கொண்டு வந்தவர் தான் பெரியார். இதற்கு சம்பிரதாயம், சடங்கு என்று எல்லாம் பெயர் வைத்தார்கள்.. இந்த பிற்போக்குத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது திமுக கழகம் தான்,
இந்தியாவில் முதல்முறையாக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்பதை தொடங்கி 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல் படுத்திக் கொண்டிருக்கின்றார் நமது முதல்வர். அது மட்டுமல்ல மகளிருக்கு கலைஞரின் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 1 கோடியே 15 லட்சம்பேருக்கு … மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.. அதில் சில குறைபாடுகள் இருக்கிறது.. விரைவில் அது சரி செய்யப்பட்டு அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொடுக்கப்பட உள்ளது. இதனை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
மணமகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஆணாக இருந்தாலும் பெண் இருந்தாலும் அழகான தமிழ் பெயரில் பெயர் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.