கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல்
பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றார்.
விமான நிலையத்தில் கேரள மாநில திமுக அமைப்பாளர் அரிமழம் கே.ஆர்.முருகேசன் தலைமையில் திமுக வினர் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பில் மாநில திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பிரின்ஸ், மாவட்ட செயலாளர் அனீஷ், மற்றும் துரை,பேச்சிமுத்து,சிற்றார் ரவிச்சந்திரன் ,ஜான்கிறிஸ்டோபர்,அமனுல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல்நிகழ்ச்சியில் துணைமுதல்வர்
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.