தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள வைகோ, வில்சன், சண்முகம், அப்துல்லா, மற்றும் அன்புமணி, சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும்.
திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் ஏற்கனவே மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக நேற்று கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். இன்று கமல் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி, கமலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என்று தெரிவித்துள்ளார்.