சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் விக்னேஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டார். டாக்டருக்கு ஆபரேசன் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டாக்டரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்த்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் கேட்டறிந்தார். டாக்டர் பாலாஜியின் உறவினர்களையும் சந்தித்து பேசினார்.
துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்…. அவர் கூறியதாவது.. தலைப்பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளது. பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. பிற்பகலில் மருத்துவ சங்கங்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.