திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நாளையும், நாளை மறுதினமும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவரது நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:
நாளை(புதன்) மாலை 3 மணிக்கு கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தொடங்கி வைக்கிறார்.
மாலை 4மணிக்கு கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள பெத்தேல் மாநகர பேராலயத்தில் கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
5 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் கோவை மக்களவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நடக்கிறது. இதில் துணை முதல்வர் பங்கேற்று எம்.பி. அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
5.30மணிக்கு கோவை பீளமேடு, எஸ்.என். ஆர் கலையரங்கில் கோவை வடக்கு, தெற்கு மற்றும் மாநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்கிறார். நாளை கோவை வரும் துணை முதல்வருக்கு மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார்.
19ம் தேதி(வியாழன்) திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் எதிரில் , பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
10.15 மணி— திருப்பூர் கருவப்பாளையம் சூர்யா நகரில் ( திருப்பூர் தெற்கு தொகுதி) கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
10.30 மணி— திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்டங்கள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.
மதியம் 1 மணிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து உரையாடுகிறார்.
மாலை 5 மணி– ஈரோடு வேப்பம்பாளையம் முத்து மகால் திருமண மண்டபத்தில், திமுக கொள்கை பரப்புக்குழு இணை செயலாளர் சந்திரகுமார் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார்.