முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. இது வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.
இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த கமல் பின்னர் பேட்டி அளித்தார். அப்போது இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்றார்.
தன்னை எம்.எல்.ஏ. என கமல் கூறியதை அருகில் நின்று கவனித்த தயாநிதிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் என கமலுக்கு நினைவுபடுத்தினார். அதைத்தொடர்ந்து தன் தவறை உணர்ந்து கொண்ட கமல், சாரி…. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஐயா அவர்களுக்கும், மேயர் பிரியா அவர்களுக்கும் நன்றி என்றார்.
மத்திய சென்னை தொகுதியில் 3வது முறையாக எம்.பியாக உள்ள தயாநிதி மாறன், எம்.பியா, எம்.எல்.ஏவா என்ற குழப்பம் கமலுக்கு ஏன் வந்தது என தெரியவில்லை.