Skip to content

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று  தயாளு அம்மாள் உடல்நலத்தில்  பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர்  மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!