கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான கிராமங்கள் உள்ளது. உணவை தேடியும் தண்ணீர் தேடியும் விவசாய நிலங்களை கடந்து சமீப காலத்தில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து செல்கின்றன. நேற்று இரவு கோவை தடாகம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்கு நுழைந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்ச்மடைந்தனர். இதனை அடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் ஊர் மக்கள் சத்தம் போட்டு யானைகளை ஒரு பகுதியில் இருந்து வெளியேற்றினார்.