அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது எனவும்,
வக்ஃப் வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது என்பது சங்க் பரிவாரங்களின் முஸ்லிம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்றும்,
இஸ்லாமிய மக்களின் நலனுக்கு முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றது என்பதனால் அவற்றை அபகரித்து அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்வதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.