தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அல் அமீன் என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அல் அமீன் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவான நிலையில், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அவரை கைது செய்தனர். இதனிடையே அல் அமீன் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்பது தெரியவந்தது. சமீபத்தில் தான் அல் அமீன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோவில் கைதான தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் அல் அமீன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கோட்பாடுகளை மீறியதற்காக அல் அமீனை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.