Skip to content
Home » டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

  • by Senthil

பெரம்பலூரைச சேர்ந்தவர் பரத்(22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் இருபது நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பரத், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.

இதன் பின் ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு பாதிக்கப்பட்டதுடன், கை அக்குள் பகுதியில் நெரிகட்டியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் பரத் துடித்துள்ளார். இதனால் பரத்தை அவரது பெற்றோர், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரத்தை கொண்டு சென்றனர்.

அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும், அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் அவரது தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்தார். சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் டாட்டூ குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று டாட்டூ குத்துபவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!