Skip to content
Home » திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோயிலுக்கு இன்று  தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் ஆலயத்தில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்தார்.

அனைத்து சிவ ஆலயங்கள் மற்றும் ஆலயங்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருப்பாவை திருவெம்பாவை பாடலை பாடி ஆலயத்தில் உள்ள சுவாமிகளை துகில் எழுப்புவதுது வழக்கம். அப்படி

விசேஷம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆன்மிக சுற்றுலா சென்று அனைத்து சிவன் ஆலயங்களில் தரிசனம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியை இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திரு நெடுங்களம் உள்ள சிவன் ஆலயத்தில் தரிசனம் செய்தார் . அவருக்கு திருச்சி மலைக்கோட்டை தருமபுர மௌன மடம் முனைவர் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் திருக்கோவில் செயல் அலுவலர் வித்யா மற்றும் அர்ச்சகர்கள் சோமசுந்தரம் சிவாச்சாரியார் ரமேஷ் சிவாச்சாரியார் பூரண கும்பம் மரியாதை செய்து திருக்கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளும் தரிசனம் செய்து தருமபுரம் ஆதீனம் குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு மற்றும் அவருடன் பயணித்த மற்ற சுவாமிகளுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சன்னிதானம் இடம் ஆசிர் பெற்றனர்.