திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு ஹாஸ்டலில் தங்கிபடித்து வருகிறார். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த மாணவரான திருவெறும்பூர் கணேசபுரத்தை சேர்ந்த பாபுராஜ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதல் விவரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஜூலை மாதம் பொன்மலையில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோரையும் போலீஸôர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பாபுராஜின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். ரேவதி பெற்றோர் ஏற்று கொண்டனர். பின்னர் மாணவி, விடுதிக்கும், இளைஞர் தஞ்சாவூரில் வேலைக்கும் சென்று விட்டனர்.
வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் கைப்பேசியில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து பின்னர் இணைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பெயரில் போலீசார் அவரை வரவழைத்து விசாரணை செய்தனர். அதில் பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர்
பாபுராஜின் பெற்றோர் அவரை பிணையில் எடுத்துள்ளனர். இதையறிந்த ரேவதி, மீண்டும் பாபுராஜிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பாபுராஜ் மறுத்ததாகவும், விவகாரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரேவதியின் பெற்றோரும் அவரை கைவிட்டனர். முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்து எந்த பலனும் ஏற்படாததால், வெள்ளிக்கிழமை காலை பாபுராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து ரேவதி போராட்டத்தில் ஈடுபட்டார். பாபுராஜ் தன்னை ஏற்று கொள்ளும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக்கூறி இரவு வரையில் போராட் டத்தை தொடர்ந்தார். போலீஸôர் பாபுராஜிடம் விசாரித்தபோது, தன்மீது பொய்வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பிய வருடன் எப்படி வாழமுடியும் ? விவாகரத்துதான் தீர்வு எனக்கூறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது