தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்ட வௌியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ராஞ்சனா..இதுதான் தனுஷ் நடிப்பில் வௌியான முதல் பாலிவுட் படம். தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வௌியாகி வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படம் வௌியாகி 10 ஆண்டுகளை நிறைவடைந்தததை தொடர்ந்து தனுஷ் தன் டிவிட்டரில்…. சில படங்கள் நம் வாழ்வை மாற்றக்கூடியவை. ராஞ்சனாவை கிளாசிக்காக
மாற்றியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது இப்படம் 10 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி இதே கதையுலகத்துடன் தொடர்புடைய ”தேரே இஷ்க் மெய்ன்” படத்தில் நடிக்கிறேன். இந்தப் பயணம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஆனால் நமக்கு ஒரு சாகசமாக இருக்கும் என பதிவிட்டிருந்தார். ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல். ராய்யே இப்படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.