சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் டேனியல் பாலாஜி (48). தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் கேரக்டரில் பெரும் பெயர் கிடைத்து. மேலும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாகவும், பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நேற்றிரவு வீட்டில் இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். நடிகர் டேனியல் பாலாஜி மரணம் கோடம்பாக்கத்தில் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது..