டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வந்தார். இந்நிலையில் ரமேஸ் இன்று சென்னை கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
டான்ஸர் ரமேஸ் அஜித்தின் துணிவு படத்திலும், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனும் நடனம் ஆடியுள்ளார். ரமேசுக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. 2வது மனைவி இன்பவள்ளி, தனது கணவரை காணவில்லை என சில மாதங்களுக்கு முன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.