அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாபழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில், பெய்து வரும் சாரல் மழையால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் கதிர்கள் தரையில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் நெல்மணிகள் முளைத்து விடும் அபாயமும் உள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், சாரல் மழை தொடர்ந்து பெய்தால் நெல் அறுவடை பணிகள் முற்றிலும் பாதித்து பெருமளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
