Skip to content

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.  இதனால் அவரால் விருதை நேரில் பெறமுடியவில்லை.
எனவே 64 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அந்த விருது தலாய்லாமாவிடம்  தர்மசாலாவில் வழங்கப்பட்டது.  மகசேசே  விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா, அறங்காவலர் எமிலி அப்ரேரா ஆகியோர் இந்த விருதினை தலாய்லாமாவிடம் நேரில் வழங்கினர்.  இந்த விருது தான் தலாய்லாமாவுக்கு கிடைத்த முதல் விருது என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது
பிலிப்பைன்ஸ முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என  அழைக்கப்படுகிறது.
:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!