‘அருள்நிதி’ நடிப்பில் வெளியான ‘டைரி’ படத்தின் பிரபலமானவர் இன்னாசி பாண்டியன். தற்போது அவர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எல்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் தனது தம்பி எல்வினுடன் இணைந்து நடிகர் ராகவா லாரன்ஸும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். பைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் சார்பில் எஸ் கதிரேசன் இந்த படத்தை தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளது. விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.