சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து வருகிறது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் உள்ள வசதிகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது. மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழகத்திலேயே உள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 691 ஆக உள்ளது. இதில் கொரோனா படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 471. ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 68,624. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 37 ஆயிரத்து 526. தீவிர சிகிச்சை படுக்கைகள் 8321 ஆக உள்ளது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்த படுக்கை விவரங்கள் ஆகும். அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 360 ஆக உள்ளது என்றார்.