Skip to content

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – முதல்வர் தாராளம்

  • by Authour
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டமன்றமன்தில் 110 விதியின் கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு  2025  ஜனவரி 1 முதல்  2 % அகவிலைப்படி உயர்த்தி  வழங்கப்படுகிறது.  இது பென்சன்தாரர்களுக்கும் கிடைக்கும். இதுபோல 2010ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள்  ஈட்டிய விடுப்பு  பெறலாம்.    இந்த ஆண்டே அக்டோபர் 1 முதல்  இந்த     ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம்  பெற்றுக்கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கான  பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. பொங்கல் போனஸ் சி, டி  பிரிவு ஊழியர்களுக்கு  ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பண்டிகை கால முன்பணம்  ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி  வழங்கப்படும். பழைய ஓய்வு ஊதியதிட்டம்  உள்பட 3 பென்சன் திட்டங்கள் குறித்து ஆராயந்திட  அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை செப்டம்பரில் அளிக்கும். திருமணமான  அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ கால விடுப்பு  காலம் ரூ.9 மாதத்தில் இருந்து ரூ.1 வருடமாக  உயர்த்தி வழங்கப்படுகிறது.  இந்த விடுப்பு காலமும்  பதவி உயர்வுக்கான  தகுதி காலமாக எடுத்துக்கொள்ளப்படும். அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும். திருமண உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.   இந்த அறிவிப்புகள் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். ‘மொத்தம் 9 அறிவிப்புகளை  முதல்வர் வெளியிட்டார்.  இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
error: Content is protected !!