சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. அதன்படி 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.