தமிழகம், ஆந்திராவில் மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக பலர் இறந்துள்ளனர். தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். புயலால் உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் கூறி உள்ளார்.