தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது . நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி அளவில் பெங்கல் புயல் உருவாகி விடும் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மதியம் கிடைத்த தகவலின்படி வரும் 30ம் தேதி பெங்கல புயல் கடலூர்- சென்னை இடையே கரையை கடக்கும என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 29, 30ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரை கடந்த பின் உள் மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருபப்த்தூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளிலும் 2 தினங்களாக மழை கொட்டுகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.